பழனிச்சாமி யாரென்றே தெரியாது: என்.கே.கே.பி.ராஜா பதில் மனு
சென்னை: ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, தான் கடத்தியதாக கூறப்படும் பழனிச்சாமி யார் என்றே தெரியாது, தனக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவைச் சேர்ந்த பழனிச்சாமி-மலர்விழி தம்பதி, மகன் சிவபாலன் ஆகியோரை கைத்தறித் துறை அமைச்சராக இருந்த என்.கே.கே.பி.ராஜா அடியாட்கள் உதவியுடன் கடத்திச் சென்றதாகவும், அவர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டதாக பழனிச்சாமியின் மருமகன் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், பழனிவேலு ஆகியோர் முன்பு பழனிச்சாமி, மலர்விழி ஆகியோர் ஆஜர்படுத்தப் பட்டனர்.
பழனிச்சாமிக்கும், மலர்விழிக்கும் உதவிக்கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நேற்றைக்கு ஒத்தி வைத்தனர்.
இதேபோன்று, பழனிச்சாமியின் சகோதரர் குகமணி என்பவரும் கடத்திச் செல்லப்பட்டதாக கூறி ஆட்கொணர்வு மனு ஒன்றை அவரது மருமகன் சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், பழனிவேலு ஆகியோர் குகமணியை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பெருந்துறை இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பதில் மனு தாக்கல் செய்யுமாறு என்.கே.கே.பி.ராஜா உள்ளிட்ட 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு விசாரணையும் நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கண்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது குகமணி ஆஜர்படுத்தப்படவில்லை. மேலும், ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர், பெருந்துறை இன்ஸ்பெக்டர் ஆகியோர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் குமரேசன் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
இதனிடையே, என்.கே.கே.பி.ராஜா, சம்பத்குமார், சின்னப்பன், கே.பி.சாமி, கோபிநாத், ஓ.சி.விஸ்வநாதன் ஆகிய 6 பேரும் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர்.
என்.கே.கே.பி.ராஜா தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், பழனிச்சாமி யாரென்றே தெரியாது. ஆள் கடத்தலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நில விவகாரத்தில் பழனிச்சாமியும், அவரை சேர்ந்தவர்களும் கடத்தப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியான பிறகே அதுபற்றி எனக்கு தெரியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சிவக்குமார், ரமேஷ் ஆகியோர் தங்கள் கட்சிக்காரர் ஈரோடு செல்ல அனுமதி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். இதற்கு அனுமதி மறுத்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கண்ணன் வழக்கு விசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்!












Click it and Unblock the Notifications