மழை, வெள்ளம்-பஞ்சாபில் 150 கிராமங்கள் மூழ்கின
டெல்லி: பஞ்சாபில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதமடைநதுள்ளன. மீட்பு பணிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் உள்பட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கன மழை பஞ்சாபை அதிகம் பாதித்துள்ளது. அதிக நீர் வரத்துக் காரணமாக பஞ்சாபின் பக்ரானங்கள் அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து நீர் வேகமாக வெளியேற்றப்பட்டது. சட்லஜ் நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு பஞ்சாபில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
அமிர்தசரஸ், டார்ன்டரன், பெரோஸ்பூர், குர்தாஸ்பூர், கபுர்தலா, ஜலந்தர், மோகா மற்றும் ஹோஷியர்பூர் உள்பட 10 மாவட்டங்கள் மோசமாக பாதித்துள்ளது. 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களாக அங்கு கன மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
நள்ளிரவில் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் செய்தவதறியாது திகைத்துள்ளனர். சாப்பாடு, தூக்கம் இன்றி தண்ணீரிலேயே குழந்தைகளுடன் மக்கள் தத்தளித்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான பயிர் நிலங்களும் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. மீட்பு பணி நடந்து வருகிற போதிலும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளை வழங்குவது கடினமாக உள்ளது.
இதையடுத்து மீட்புப் பணிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 250 குடும்பங்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், இந்த மழை மற்றும் வெள்ளத்தால் வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை போன்ற அடிப்படை கட்டமைப்புகள் சேதமாகியுள்ளன. பஞ்சாபில் உள்ள நீர் ஆதார கட்டமைப்புகள் மிகவும் நலிவாக உள்ளன.
இதுகுறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நீர்வளத்துறை அமைச்சர் சைபுதின்சோஸ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நீர்வளத்தை பலப்படுத்தவும், மறுவாழ்வை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன் என்று கூறினார்.
சினிமா பார்த்த முதல்வர்:
இதற்கிடையில் ஜலந்தரில் திரையிடப்பட்ட சிங் இஸ் கிங்ஸ் என்ற பாலிவுட் படத்தை பார்க்க சென்றார் பாதல். 'படம் பார்த்து 10-15 வருடங்கள் ஆகிறது. இந்த படத்தை வீடியோவிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் இருந்தேன். ஜலந்தரில் திரையிடப்பட்டுள்ளதால் பார்க்க வந்தேன்' என்று கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications