ரங்கசாமி தப்புவாரா? இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக அவரது அமைச்சரவையைச் சேர்ந்த 5 அமைச்சர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகவும், ரங்கசாமி உடனே பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைக்கு அவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த 18ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டி பெரும்பான்மை நிருபிக்க வேண்டும் என்று ரங்கசாமிக்கு உத்தரவிட்டது காங்கிரஸ் தலைமை. இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற ரங்கசாமி, சோனியாவை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விளக்கினார். பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்டார். இதனால் எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
18ம் தேதிக்குப் பதிலாக 25ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று புது உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ரங்கசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். இந்த சோதனையில் ரங்கசாமி வெற்றி பெற்றால்தான் அவரது பதவி தப்பும் என்பதால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது.
பாதுகாப்புக்கு 1500 போலீஸார்!
தேவையான எம்எல்ஏக்களின் பலம் தனக்கு இருப்பதாக முதல்வர் ரங்கசாமி கூ றிவருகிறார். இதை எதிர்ப்பு கோஷ்டி மறுத்து வருகிறது. பரபரப்பான, பதட்டமான சூழ்நிலையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடுவதால் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் சட்டசபை கட்சிக் கூட்டத்தின்போது ரங்கசாமி மற்றும் எதிர் கோஷ்டியினருக்கிடையே கை கலப்பு, மோதல், அடிதடி நடந்தால் சமாளிப்பதற்காக 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை - கட்சி நிலவரம்:
மொத்த இடங்கள் - 30
காங்கிரஸ் - 10
திமுக -7
அதிமுக - 3
பாமக - 3
புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ்- 3
மதிமுக- 1
சுயேச்சைகள்- 3
இவர்கள் தவிர 3 நியமன எம்.எல்.ஏக்கள்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications