பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்
சென்னை: சென்னை வந்து கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
தென்காசியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மனைவி சாந்தி (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் சென்னையில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார்.
ரயில் செங்கல்பட்டு அருகே வந்து கொண்டிருந்தபோது, சாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கணவர் அண்ணாமலை ரயில் டிடியிடம் தெரிவித்தார்.
அவர் தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தரவே, அந்த ரயில் நிலையத்தில் டாக்டர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் அதற்குள்ளாக வழியிலேயே ஓடும் ரயிலில் சாந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரயில் தாம்பரம் வந்ததும் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவர் வேறு வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ரயிலில் கிடந்த நகை-உரியவரிடம் ஒப்படைப்பு:
இதற்கிடையே ரயிலில் கிடந்த 10 பவுன் நகையை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின் பெட்டிகளில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது எஸ்-5 பெட்டியில் பை ஒன்று கிடந்தது. அதில், 10 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவை இருந்தன. அதை எழும்பூர் ரயில்வே போலீஸ் நிலையத்தில் காவலர்கள் ஒப்படைத்தனர்.
அதே நேரத்தில், பையை தவற விட்டவரான ராஜா என்பவர் மாம்பலம் ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தில் அது குறித்து புகார் தந்தார்.
இதையடுத்து அந்த நபரை வரவழைத்த எழும்பூர் ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி பையை ஒப்படைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications