வேலூர் மருத்துவமனையில் கருணாகரன் அனுமதி
திருவனந்தபுரம்: முன்னாள் கேரள முதல்வர் கருணாகரன், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே. கருணாகரன் சென்ற கார் ஒரு மாதத்திற்கு முன்பு விபத்தில் சிக்கியது. அதில் கருணாகரனுக்கு எந்த விதமான வெளிப்புற காயமும் ஏற்படவில்லை. ஆனால் உள் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலன் தராததால், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தற்போது அங்கும் சிகிச்சை திருப்திகரமாக இல்லாததால் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கருணாகரன் மாற்றப்பட்டுள்ளார்.
அவரை அவரது மகள் பத்மஜா வேணுகோபால், குடும்ப டாக்டர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் வேலூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விமான ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் கொண்டு செல்லப்பட்டார் கருணாகரன்.
வேலூர் மருத்துவமனையில் கருணாகரனை டாக்டர்கள் குழு தீவிரமாக பரிசோதிக்கவுள்ளது. பின்னர் அவருக்குத் தரப்பட வேண்டிய பிசியோதெரபி சிகிச்சை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications