ஈவ் டீசிங்: மாணவி தற்கொலை-2 வாலிபர்களுக்கு வலை
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஈவ் டீசிங் கொடுமை தாங்காமல் மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இரண்டு வாலிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சுகன்யா (17), மளவாளநகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
சுகன்யா பள்ளிக்கு செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (22), யாதேஸ் (23) ஆகியோர் அவரை கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சுகன்யா பள்ளிக்கு செல்லும்போது மாரியப்பனும், யாதேசும் அவரை பின் தொடர்ந்து சென்று பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளனர்.
பயந்துபோன சுகன்யா, அவர்களிடம் இருந்து தப்பி வீட்டுக்கு திரும்பி வந்தார். மனமுடைந்த சுகன்யா வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்கள், சுகன்யாவை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுகன்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுகன்யாவின் தந்தை சங்கர் ஸ்ரீபெரும்புதூர் போலீலில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட மாரியப்பன், யாதேஷ் இருவரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications