இலங்கையில் இந்திய படை: 16ம் தேதி திருமா. ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் மறைமுகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்திய படையினர் அனைவரையும் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 16ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். மேலும், இலங்கை படையினரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 இந்திய பொறியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை ராணுவ தளத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்திய ரேடார் கருவிகளை இயக்குகிற பணியையும். அது தொடர்பாக இலங்கை படையினருக்கு பயிற்சி அளித்தும் வருகின்றனர்.
இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது. இந்தப் போக்கை உடனடியாக இந்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழனத்திற்கு எதிராக ஈழத்தில் மறைமுகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்திய படையினர் அனைவரையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications