டெல்லி குண்டுவெடிப்புக்கு ராம. கோபாலன் கண்டனம்
சென்னை: தீவிரவாத தாக்குதல்களை ஒடுக்க மத்திய அரசு தனி புலனாய்வு துறையை அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி தொடர் குண்டுவெடிப்புக்கு ராம. கோபாலன் கடும் கண்டனம் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் அனுதாபமும், பிரார்த்தனையும் செய்கிறது.
பெங்களூரு, ஹைதராபாத், குஜராத், அகமதாபாத், ஜெய்ப்பூர், என பயங்கரவாதத்தின் கோர தாண்டவம் டெல்லியில் அரங்கேறியிருக்கிறது. பயங்கரவாதிகள் நாங்கள் தாக்குதல் நடத்தப்போகிறோம் என முன் அறிவிப்பு செய்து வெடிகுண்டு வைக்கிற அளவுக்கு தைரியம் வந்துள்ளதற்கு யார் காரணம்?
ஓட்டுக்காக பேசக் கூடாது:
பிஜேபிக்கு செல்வாக்கு குறையும்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கும் என்று சில பத்திரிகைகளும், பிஜேபி ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பதற்கு பிஜேபியே காரணம் என்று அதிமேதாவித்தனமான அறிக்கை வெளியிட்ட தமிழக காங்.தலைவர் தங்கபாலு தற்போது எங்கே போனார்? வாய்மூடி மௌனியாக இருப்பதற்கு காரணம் என்ன?
டெல்லியில் நடைபெறுவது காங்கிரஸ் அரசு தானே! ஷீலா தீட்சித் என்ன பிஜேபி முதல்வரா? ஆகவே ஓட்டுக்காக ஏதாவது பேசவேண்டும் என்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதை விட்டுவிட்டு, பயங்கரவாதிகளுக்கு வெண்சாமரம் வீசி, ராஜ உபசாரம் செய்து வரும் போக்கை மத்திய அரசும், மற்ற கட்சிகளும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
பயங்கரவாதிகளை உருவாக்கக் கூடிய மனநிலையை வளர்க்கும் மதரசாக்களை கண்காணித்து தடைசெய்ய வேண்டும்.
மீண்டும் பொடா வேண்டும்:
பொடா சட்டத்தை கடுமையாக்கி நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளின் ஊது குழலாகச் செயல்படும் மனித உரிமை இயக்கங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே அதனைக் கண்டுபிடித்து தடுப்பதற்கும், ஒடுக்குவதற்கும் தனி புலனாய்வுத் துறையை உருவாக்க வேண்டும்.
பயங்கரவாதிகளிடமிருந்தும், குண்டுவெடிப்பு சம்பவங்களிலிருந்தும் தற்காத்துக் கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளை பள்ளி, கல்லூரி தொடங்கி பொதுமக்களுக்கும் கொடுக்க வேண்டும்.
இஸ்ரேல் உதவியை நாடுக:
பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்தையும் ஒடுக்குவதற்குத் தேவையான ஆயுதங்கள், கருவிகள், பயிற்சிகளை இஸ்ரேலிடமிருந்து பெற்று ஈவு, இரக்கமின்றி ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications