டெல்லி குண்டுவெடிப்பு: அமெரிக்க இந்திய முஸ்லீம்கள் கண்டனம்
நியூயார்க்: டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்திய முஸ்லீம் கவுன்சில் (அமெரிக்கா) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த பயங்கரவாத செயலை அதிகபட்ச கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாகவும், பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் ரஷீத் அகமது கூறுகையில், அமெரிக்க இந்திய முஸ்லீம் கவுன்சில், டெல்லி குண்டுவெடிப்பை மிகக் கடுமையாக கண்டிக்கிறது. இது மிகவும் அநாகரீகமான, இழிவான செயல். கோழைத்தனமான வன்முறை. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும், காயமடந்தோருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவில் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலை தருகிறது. இது மதவெறியர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் பயமுறுத்தும் செயலாகும்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான, நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
உண்மையான குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீஸார் தீவிரம் காட்ட வேண்டும். மாறாக அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது.
அகமதாபாத், பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை போலீஸார் பலிகடாவாக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்திலும் அதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து விடக் கூடாது என்று அவர் கூறினார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications