நெல்லை-திருச்செந்தூர் ரயில் சேவை 26ல் தொடக்கம்
நெல்லை: நெல்லை-திருச்செந்தூர் இடையிலான அகலரயில் பாதை பணி முடிந்துவிட்டது. இதையடுத்து வரும்
26ம் தேதி ரயில் சேவை தொடங்கப்படுகிறது.
நெல்லை-திருச்செந்தூர் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து கடந்த 2006 டிசம்பரில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு ஜனவரியில் அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் சுமார் ரூ.70 கோடியில் தொடங்கப்பட்டது. 62 கிமீ தூரமுள்ள இந்த பாதையில் புதிதாக 194 பாலங்கள் கட்டப்பட்டன.
புதிய பிளாட்பாரங்கள், ரயில் நிலைய கட்டடங்கள், தண்டவாளம் அமைக்கும் பணி அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சிஜேஎஸ் நாயுடு கடந்த ஆகஸ்ட் மாதம் 18 முதல் 20ம் தேதி வரை பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு 120 கி.மீ. வேகத்தில் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையி்ல் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரயில் சேவை வரும் 26ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கான விழா திருச்செந்தூரில் நடைபெறுகிறது. விழாவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications