கார் விபத்தில் இன்ஸ்பெக்டர்-மனைவி பலி
திண்டிவனம்: திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் அவரது மனைவியும் பரிதாபமாக இறந்தனர். அவர்களின் குழந்தைகள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம் உத்தமப்பாளைத்தைச் சேர்ந்தவர் கோபால் (44). மதுரை தெற்கு வாசல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி பரிமளா (32), மகள் சூர்யா (16), மகன்கள் அர்ச்சுனன் (12), கார்த்திக் (10) ஆகியோருடன் காரில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டனர். டிரைவர் ராஜா (32) காரை ஓட்டினார்.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு திண்டிவனம் அருகில் உள்ள கேணிப்பட்டு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் கோபால், அவரது மனைவி பரிமளா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த சூர்யா, அர்ச்சுனன், கார்த்திக் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த திண்டிவனம் டிஎஸ்பி குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் கோபால் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications