For Daily Alerts
Just In
விடுதலைப் புலிகளின் கடற்படை தளம் மீது சரமாரி தாக்குதல்
கொழும்பு: யாழ்ப்பாணம் தீபகற்பப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளம் மீது இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 கடற்புலிகள் இறந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் தீபகற்பப் பகுதியில் உள்ள பூனேரி கடற்புலிகள் தளம் மீது நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்தது. விமானப்படையின் எம்ஐ-24 ரக போர் விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன.
இதில் புலிகளின் கடற்படைத் தளம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. விமானப்படையும் இதை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரத் தெரிவிக்கையில், முல்லைத் தீவு பகுதியில் பாதுகாப்புப் படையினர் வன்னியை மீட்பதற்காக கடும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொக்குவில் பகுதிக்குள் ராணுவம் ஊடுறுவி வருகிறது என்று தெரிவித்துள்ளது.