மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம் - துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் மதுரையைச் ேசர்ந்த மீனவர் உயிரிழந்தார்.
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், தாக்கி காயப்படுத்துவதும், படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதற்கு விடிவே கிடையாதா என்ற ஏக்கத்திலும், சோகத்திலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை தனது வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. இன்று அதிகாலை ராமேஸ்வரம் பகுதியைச் ேசர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு இலங்கை கடற்படை வந்தது.
தமிழக மீனவர்களை சுற்றிச் சூழ்ந்த கடற்படையினர், சரமாரியாக துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் முதுகில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications