வாள் சண்டை-சிறுமியின் கழுத்தில் பாய்ந்த வாள்!
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற மாநில ஜூனியர் வாள் சண்டை போட்டியில் சேலத்தை சேர்ந்த சிறுமிக்கு கழுத்தில் வாள் பாய்ந்தது. அதை டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் அகற்றினர்.
திருச்சி மாவட்ட வாள் சண்டை சங்கம் சார்பில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப் பள்ளியில் மாநில அளவிலான வாள் சண்டை போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சேலத்தை சேர்ந்த ரூபகீர்த்தி என்ற சிறுமிக்கு கழுத்தில் சுமார் 8 சென்டி மீட்டர் அளவு வாள் பாய்ந்தது. இதில் அவரது உணவுக் குழாய், சுவாசக் குழாயில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு கழுத்தில் வாளுடன் கொண்டு செல்லப்பட்டார்.
சுமார் ஒன்னறை மணி நேரம் டாக்டர்கள் ராஜாராம், செந்தில் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆபரேஷன் செய்து கழுத்தில் பாயந்த வாளை அகற்றினர். வெட்டுப்பட்ட உணவு, மூச்சுக் குழாய்களையும் இணைத்தனர்.
இதையடுத்து சிறுமி உயிர் பிழைத்தார்.












Click it and Unblock the Notifications