டெல்லி: டிவி பெண் நிருபர் சுட்டுக் கொலை

காரில் சென்றபோது அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
25 வயதான செளம்யா வி்ஸ்வநாதன் கேரளத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நேற்று அதிகாலை டெல்லி ஜண்டேவாலன் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வசந்த் குன்ஜ் பகுதியில் உள்ள தனது இல்லத்துக்கு மாருதி சென் காரில் சென்றார்.
3.30 மணியளவில் வசந்த் குன்ஜ் பகுதியில் நெல்சன் மண்டேலா சாலையில் மையத் தடுப்பின் மீது மோதிய நிலையில் அவரது கார் நின்றிருந்தது. தலையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் மயங்கிக் கிடந்தார் செளம்யா.
முன் பக்க டயர்கள் பஞ்சரான நிலையி்ல், ஹெட் லைட் எரிந்தவாறு நின்றிருந்த இந்த கார் குறித்து சிலர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.
முதலில் போலீசார் இது விபத்து என்றே கருதினர். ஆனால், பிரேதப் பரிசோதனை நடத்தியபோது அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்தே இது கொலை என்பது உறுதியானது.
காரை ஓட்டிச் சென்ற செளம்யாவை யாரோ சுட்டுள்ளனர். இதில் நிலை தடுமாறி அவர் சாலை தடுப்பில் மோதியிருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும் அவரது காரின் பக்கவாட்டிலும் பெரும் கீறல்கள் உள்ளன. இதனால் இவரது காரை யாரோ இடித்து, தள்ளிச் சென்று பின்னர் சுட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவரது கார் டயரிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன் தனது வீட்டினருடன் செல்போனில் பேசியிருக்கிறார் செளம்யா.
இந்தக் கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications