விழுப்புரத்தில் விஷமிகள் கைவரிசை: கல்லறைகள் மீது தாக்குதல்
விழுப்புரம்: விழுப்புரத்தில், கல்லறைத் தோட்டத்தில் புகுந்த ஒரு விஷமக் கும்பல், அங்கிருந்த கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த சிலுவைகளை குறி வைத்து தாக்கி சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆங்காங்கே கிறிஸ்தவ ஆலயங்கள், பிரார்த்தனைக் கூடங்களில் விஷமிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் உள்ளது செயின்ட் சேவியர் கல்லறைத் தோட்டம். இங்கு நேற்று இரவு புகுந்த சிலர் அங்கிருந்த கல்லறைகளை அடித்து நொறுக்கினர். பின்னர் சிலுவைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மொத்தம் 21 கல்லறைகள் இதில் சேதமடைந்தன.
இதுகுறித்து கல்லறைத் தோட்ட நிர்வாகிகளில் ஒருவரான பிலோமின் தாஸ் கூறுகையில், சிலுவைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைப் பார்க்கும்போது மதக் கலவரத்தை தூண்டும் சக்திகள்தான் இதற்குப் பின்னணியில் இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். விஷமிகள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கல்லறைகள் தாக்கப்பட்ட தகவல் பரவியதும் அங்கு ஏராளமான பேர் திரண்டனர். இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications