ஜெட்-கிங்பிஷ்ஷர் கூட்டணி: தப்பிய முதலாளிகள்; மாட்டிக் கொண்ட பயணிகள்!

ஆனால் இன்று... கிங் பிஷர் லோகோவில் பறந்து கொண்டிருக்கிறது ஏர் டெக்கான்!.
ஜெட்டுக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான் இப்போது. தன்னை இந்தியன் ஏர்லைன்சுக்கு இணையாக நினைத்துக் கொண்டிருந்த ஜெட்டுக்கு கடந்த இரு காலாண்டுகளில் ஏற்பட்ட கடும் நஷ்டம், பங்கு விலைச் சரிவு மற்றும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைவு பெரிய பாடங்களைக் கற்றுத் தந்துவிட்டது.
சர்வதேச அளவில் பெருகி வரும் நிதி நெருக்கடி காரணமாக பல விமானங்கள் 50 சதவிகித காலி இருக்கைகளுடன் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.
ஒரே வழித் தடத்தில் இப்படி காலி இருக்கைகளுடன் இரு வேறு விமானங்களை இயக்குவதற்குப் பதில், கூட்டாக செயல்பட்டு ஒரே விமானத்தை இயக்கினால் மொத்தமாக லாபம் வரும். பின்னர் அதைச் சரி பாதியாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதுதான் மல்லையாவின் யோசனை. இதனை உடனே ஏற்றுக் கொண்டது ஜெட் நிறுவனம்.
விளைவு, நேற்று வரை கடும் தொழில் எதிரிகாளாக இருந்த விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனமும், ஜெட்டும் இன்று அண்ணன் தம்பிகளாக உறவாடுகின்றன.
திவாலாகாமல் தடுக்க...
பணியாளர்கள், நிர்வாகச் செலவு எல்லாமே பாதியாகக் குறைந்துவிட்டது இரு நிறுவனங்களுக்கும்.
இனி ஜெட் பைலட் கிங் பிஷ்ஷர் ஓட்டுவார். கிங்பிஷ்ஷர் அதிகாரி ஜெட் பயணிக்கு டிக்கெட் கிழிப்பார்... எல்லாம் சரிதான். இந்த ஒப்பந்த்தால் சாதாரண பயணிக்கு என்ன லாபம்?
'முற்றிலும் மேம்பட்ட சேவை, துல்லியமான நேரத்தில் புறப்பாடு... இவை இரண்டையும் வேறெந்த விமானத்தையும் விட எங்களால் இனி சிறப்பாகத் தர முடியும். இது போதாதா?' என்கிறார் மல்லையா.
தங்கள் நிறுவனம் திவாலாகாமல் தடுக்கவும், பங்குதாரர்களின் நலன் காக்கவும்தான் இந்த நடவடிக்கை என்று அறிவித்துள்ளார் ஜெட் நிறுவன நிர்வாக இயக்குநர் நரேஷ் கோயல்.
இவர்களது பார்வையில் சரிதான். ஆனால் பயணிகளுக்கு இந்தக் கூட்டணியால் லாபமில்லை... பெரும் கஷ்டம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
எப்படி?
பயணிகளுக்கு சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மாற்று விமானங்களே இருக்காது (அதானே மல்லையா பிளான்!). இவர்களின் விமானத்தில் இவர்கள் குறித்த தொகையைக் கொடுத்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம் வரும். இது எத்தனைப் பெரிய ஆபத்து? என்கிறார்கள்.
முன்பு ஏர்டெக்கான் குறைந்த கட்டணத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது கிங் பிஷருடன் இணைந்த பிறகு மற்ற விமானங்களில் வாங்குவதற்கு இணையான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எனவே இத்தகைய கூட்டணி பயணிகளுக்கு நஷ்டம், முதலாளிகளுக்கு லாபம் என்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் கூட்டணி அமைத்ததால் திவாலாகாமல் தப்பித்தன ஜெட்டும், கிங்பிஷரும். ஆனால், திவாலாகப் போகிறவர்கள் பயணிகள் தான்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications