மழை-மனித சங்கிலி: நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை
சென்னை: சென்னையில் நேற்று பெய்த பலத்த மழை மற்றும் மனித சங்கிலி போராட்டம் காரணமாக ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் ஸ்தம்பித்துப் போயின. நள்ளிரவுக்கு மேல்தான் நிலைமை படிப்படியாக சரியானது.
சென்னையில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. காற்றும் இல்லாததால் மழை மிகக் கடுமையாக இருந்தது. இதனால் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், நேற்று திமுக தலைமையில் நடந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் இடியாப்பச் சிக்கலாகிப் போனது.
அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றன. நேரம் ஆக ஆக இதுவும் குறைந்து வாகனங்கள் எங்கும் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.
நடந்து செல்ல முடியாதஅளவுக்கு சாலையோரங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் நடக்கவும் முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
தீபாவளிக்காக ரயில்கள், பஸ்களைப் பிடிக்க கிளம்பியோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவற்றை தவற விட்டனர். நூற்றுக்கணக்கானோர் கோயம்பேடு பஸ் நிலையத்தை மிக தாமதமாக வந்தடைந்து பஸ்களைத் தவற விட்டு இரவு முழுவதும் பஸ் நிலையத்திலேயே தஞ்சமடைய நேரிட்டது.
கிண்டி முதல் பல்லாவரம் வரை மழை நீர் வெள்ளமென தேங்கி நின்றதால் வெளியூர் பஸ்கள் போக முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.
சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்த இந்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பிறகுதான் படிப்படியாக போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்கியது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications