கோவையில் திமுகவுக்கு எதிராக காங் போஸ்டர்
கோவை: மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை கடுமையாக விமர்சித்து கோவையில் காங்கிரஸார் ஒட்டிய போஸ்டர்களால் திமுகவினர் கோபமடைந்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த அன்னை இந்திரா தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் ஊட்டியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், திமுக அமைச்சர்களை கிண்டல் செய்யும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில், 'சோனியாவிடம் பதவி வாங்கலாம்; முதல்வரிடம் அரிசி வாங்கலாம்; ஸ்டாலினிடம் டிவி வாங்கலாம்; ஆனால், ஆற்காடு வீராசாமியிடம் மின்சாரம் வாங்க முடியுமா?' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்களுக்கு கீழ், அன்னை இந்திரா தேசிய காங்கிரஸ்- கோவை என எழுதப்பட்டு சில மொபைல் போன் எண்களும் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டரால் திமுகவினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இது கோவை காங்கிரஸைச் சேர்ந்த ஒரு கோஷ்டியினரின் குசும்புத்தனம். காங்கிரஸார் மற்றும் திமுகவினரிடையே பிளவை ஏற்படுத்தும் முயர்சி என காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதிமுக ஆதரவு காங்கிரஸார்தான் இதை செய்துள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
-
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications