2,67,000 கிமீ உயரத்தை எட்டியது சந்த்ராயன்

பூமியிலிருந்து 1,65,000 கி.மீ. உயரத்தில் நீள் வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்த சந்த்ராயன் இன்று 2,67,000 கி.மீ. உயரத்தை அடைந்தது. அதிலுள்ள மேட்டார்களை இன்று 3 நிமிடம் 12 நொடி இயக்கி அதன் உயரம் அதிகரிக்கப்பட்டது.
இப்போது நீள்வட்டப் பாதையில் சுற்றும் சந்த்ராயனுக்கும் பூமிக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 2,67,000 கி.மீ ஆகும். குறைந்தபட்ச தூரம் 465 கி.மீ. ஆக உள்ளது.
இந்த உயரத்தில் அது பூமியை ஒரு முறை சுற்றி வர 6 நாட்கள், 15 நிமிடங்கள் ஆகும்.
இது குறித்து சந்த்ராயன் திட்ட இயக்குனரான அண்ணாதுரை கூறுகையில், வரும் நவம்பர் 3ம் தேதி தான் மிக முக்கியமான நாள். அன்று தான் கடைசியாக சந்த்ராயனின் தூரம் அதிகரிக்கப்பட்டு நிலவை அது நெருங்கும். அன்றைய தினம் சந்த்ராயன் 384,000 கி.மீ. தூரத்தை எட்டும்.
நவம்பர் 8ம் தேதி இந்த விண்கலம் நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்துவிடும். இதையடுத்து அதை நிலவில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் பறக்கச் செய்வோம். இது நவம்பர் 14 அல்லது 15ம் தேதி நடக்கலாம்.
இதற்குத் தேவையான அளவு எரிபொருள் விண்கலத்தில் உள்ளது. அதில் மொத்தமுள்ள 819 கிலோ எரிபொருளில் இதுவரை 340 கிலோ தான் செலவிடப்பட்டுள்ளது என்றார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications