திவால் நோட்டீஸ் விட பரிசீலிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவால் அறிவிப்பை வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியால் பல பிரபல நிறுவனங்கள், வங்கிகள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் அடுத்து சேரப் போவது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமாக இருக்கும் எனத் தெரிகிறது.
நிலைமையை சமாளிக்க திவால் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன இயக்குநர்கள் குழு அறிவித்துள்ளது.
அதேசமயம், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரியான ரிக் வேகனர், திவால் அறிவிப்பை வெளியிட தேவையில்லை. அது பிரச்சினைக்குத் தீர்வல்ல என்ற கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் அவருக்கும், இயக்குநர்கள் குழுவுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி நிலைமையை சமாளிப்பது குறித்து ஆலோசித்தது. அப்போது திவால் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
இருப்பினும் திவால் அறிவிப்பு தீர்வுக்கு பொருத்தமானதல்ல என்ற கருத்தை தலைமை செயலதிகாரி வேகனர் வெளிப்படுத்தியுள்ளார்.
திவால் நிலைமையை தவிர்க்கும் வகையிலான பிற சாத்தியக் கூறுகள் குறித்து தற்போது நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகனரும், போர்ட் மோட்டார் கம்பெனி மற்றும் கிரைஸ்லர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரிகள் சமீபத்தில் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தனர். அங்கு அமெரிக்க எம்.பிக்களை சந்தித்தனர். அப்போது, சரிவிலிருந்து மீள 25 பில்லியன் டாலர் நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து விட்டு வந்துள்ளனர்.
நிதியுதவி செய்வதற்கு வசதியாக அதுகுறித்த விரிவான திட்டத்துடன் வருமாறு மூன்று தலைமை செயலதிகாரிகளிடமும் எம்.பிக்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் திவால் அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்கப்படுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிடமிருந்து செய்தி வெளியாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications