வேலை இழப்பைத் தடுக்க முடியாத பிரதமரின் நிதிச் சலுகைகள்!
டெல்லி: பிரதமர் அளித்துள்ள 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச் சலுகைகள் மற்றும் கடன் உதவிகளாலும் கூட இந்திய நிறுவனங்களில் துவங்கியுள்ள வேலை நீக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அடுத்த மூன்றே மாதங்களில் இந்தியாவின் உற்பத்தித் துறையில் 10 முதல் 30 சதவிகிதம் வரை வேலை இழப்பு ஏற்படும் என இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 200- சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது எப்ஐசிசிஐ.
குறிப்பாக ஜவுளித்துறை, உலோகம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகளில் 50 சதவிகிதம் வரை வேலை நீக்கம் உறுதி என அபாய மணி அடித்துள்ளது இந்த அமைப்பு. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நிறுத்துவதைத் தவிர நிறுவனங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
காரணம் ஜவுளி மற்றும் தோல் பொருள் உற்பத்தித் துறையில் கடந்த செப்டம்பர் மாத்ததிலிருந்து பெரும் நஷ்டம் நிலவுவதாகவும், இன்னும் சில ஆண்டுகளுக்கு இதனைச் சரி செய்ய முடியாது என்றும் எப்ஐசிசிஐ கூறியுள்ளது.
அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதியும் 60 சதவிகிதம் வரை குறைந்து விட்டதால், அந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட உற்பத்தி குறைப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளை பெருமளவு குறைப்பதில் தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்கிறது எப்ஐசிசிஐ.
பிரதமர் ரூ.75 ஆயிரம் கோடிக்கும் மேல் பல பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும், இன்னும் கூட வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் 8 முதல் 10 சதவிகிதமாகவே உள்ளதால் கடன் சுமையும் குறையாமல் இருப்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் புகார் கூறியுள்ளன.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications