ஊனமுற்ற நோயாளிடம் லஞ்சம் டாக்டர் கைது
நாகர்கோவில்: ஊனமுற்ற நோயாளியிடம் லஞ்சம் வாங்கிய நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சில டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது குறித்து அதிகாரபூர்வ புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஓழிப்பு போலீஸ் டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜராம், தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தராஜ், சித்திரை ஜெயக்குமார், ஏட்டுகள் அசோக்குமார், முருகன், நாகராஜன், மகாவிஷ்ணு, குமரேசன் ஆகிய 11 பேர் அடங்கிய லஞ்ச ஓழிப்பு போலீசார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அப்போது வெளிநோயாளிகள் கூட்டத்தில் உள்ள உடல் ஊனமுற்றோர் ஆலோசனை பிரிவில் ஏராளமான ஊனமுற்ற ஆண்களும், பெண்களும் நின்றிருந்தனர்.
அங்கு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியரும், எலும்பு முறிவு சிகிச்சை டாக்டருமான ஸ்ரீதர் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உடல் ஊனமுற்ற நோயாளிகள் பலரிடம் இருந்து பணத்தை வாங்கி தனது சூட்கேசில் போட்டுள்ளார்.
அந்த நேரத்தில் அந்த ரூமை லஞ்ச ஓழி்ப்பு போலீசார் சுற்றி வளைத்தனர். டாக்டர் ஸ்ரீதர் நோயாளிகளிடம் பணம் வாங்கும்போது அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த சூட்கேசை வாங்கினர். அப்போது அதில் 6 ஆயிரத்து 550 ரூபாய் பணம் இருந்தது.
அவற்றை லஞ்ச ஓழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதை எதிர்பார்க்காத டாக்டர் ஸ்ரீதர் செய்வதறியாது தவித்தார்.
ஊனமுற்றோர் சான்றிதழ் வழங்குவதற்காக அங்கு வந்த நோயாளிகளிடம் தலா 100 ரூபாய் வாங்கியுள்ளார்.. நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட டாக்டர் ஸ்ரீதர் மீது லஞ்ச ஓழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications