தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை விட்டுத் தந்த சரத்
மதுரை: திருமங்கலம் சட்டசபை இடைத் தேர்தலில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனுக்கு முரசு சின்னத்தை விட்டுத் தந்துள்ளார் சரத்குமார். அவரது அஇசம கட்சி வேட்பாளரான பத்மநாபனுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, அஇசமக உள்ளிட்ட 12 சுயேச்சைகளும் 'முரசு' சின்னம் கேட்டு விண்ணப்பித்ததால் அந்த சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. பின்னர் பதிவு பெற்ற கட்சிகளான தேமுதிக, அஇசமக ஆகிய கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்போது முரசு சின்னத்தை தேமுதிக கேட்டதால் அதை அவர்களுக்கு விட்டுத் தருமாறு கட்சியின் தலைவர் சரத்குமார் தனது வேட்பாளரை அறிவுறுத்தினார்.
இதையடுத்து அந்த சின்னம் தேமுதிகவுக்கு விட்டுத் தரப்பட்டது.
அஇசமக வேட்பாளர் பத்மநாபனுக்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்தது.
இதற்கிடையே சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றதால் இப்போது இந்தத் தொகுதியில் 26 பேர் களத்தில் உள்ளனர். இதனால் இங்கு இரண்டு ஓட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவு்ளன.
வரும் ஜனவரி 9ம் தேதி இங்கு வாக்குப் பதிவு நடக்கிறது.
களத்தில் உள்ள வேட்பாளர்கள் விவரம்: லதா அதியமான் (திமுக,), முத்துராமலிங்கம் (அதிமுக), தனபாண்டியன் (தேமுதிக), பத்மநாபன் (அஇசமக)
சுயேச்சைகள்:
ராமசாமி, ராஜாங்கம், கலுவநாதன், கலைச்செல்வன், கேபிரியேல் சந்திரமோகன், கோதண்டபாணி, சந்திரன், சின்னராஜ், தனுஷ்கோடி, செல்வம், திலகர், நூர்முகம்மது, பத்மராஜன், பரமசிவம், பாண்டிக்குமார், பாக்கியசெல்வன், பாபுவெங்கடேஷ், பால்பாண்டி, மன்மதன், முருகன், ரமேஷ்பாபு, ஸ்டான்லி ஆல்வின் ஆகியோர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications