மண மேடையில் 'இரட்டை கொலை' மாப்பிள்ளை கைது
நாகர்கோவில்: இரட்டை கொலை வழக்கில் 7 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகாமல், மஸ்கட்டில் தலைமறைவாக இருந்தவர் கல்யாண மேடையில் வைத்து நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பாட்டவிளையை சேர்ந்தவர் ராபி (வயது 39). இவருக்கு சார்லஸ், ரவி ஆகிய இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
கடந்த 1992ல் சுதந்திர தினந்தன்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அம்பலக்கோட்டை பகுதியை சேர்ந்த பாலையன், மகாலிங்கம், ரவீந்திரன் ஆகிய 3 பேருக்கும், ராபி சகோதரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் பாலையன், மகாலிங்கம் ஆகிய 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த நாகர்கோவில் கோர்ட் 1995ல் ராபி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராபி குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதில் இந்த 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கொலையான பாலையன், மகாலிங்கம் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சார்லஸ், ரவி ஆகிய 2 பேரும் ஆஜரானார்கள். ராபி தலைமறைவாகி விட்டார்.
அரபு பகுதியில் உள்ள மஸ்கட்டுக்கு தப்பிச் சென்ற அவர் அங்கு கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளர். கடந்த 7 ஆண்டுகளாக அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் மஸ்கட்டில் இருந்து ராபி இந்தியா வந்து திங்கள்சந்தை பகுதியில் தங்கி இருந்தார். அவருக்கும் திங்கள்சந்தை பறையன்விளை பகுதியை சேர்ந்த செண்பகபெருமாள் மகள் ராணிக்கும் திருமணம் நடத்த முடிவு செய்து திருமண அழைப்பிதழ் அடிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவுடன் ராபியை தேடி வந்த போலீசாருக்கு, ராபி ஊருக்கு வந்திருப்பதும் அவருக்கு திருமணம் நடக்க போகும் தகவலும் தெரிய வந்தது.
இந்நிலையில் திங்கள்சந்தை ராதாகிருஷ்ணன் கோவிலில் ராபி-ராணி திருமணம் நேற்று காலை நடந்தது. கோவிலில் இருந்து அருகில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு மணமக்கள் அழைத்து வரப்பட்டனர்.
அப்போது போலீசார் திடீரென்று திருமண மண்டபத்துக்குள் நுழைந்து ராபியை கைது செய்தனர். அவரை தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications