புலம்புவது ஜெயலலிதாவின் வழக்கம் தானே-அழகிரி

Subscribe to Oneindia Tamil

மதுரை: எந்த தேர்தலிலும் தோல்வி அடைந்தாலும் மின்னணு இயந்திரத்தை குறை கூறுவது ஜெயலலிதாவின் வழக்கமாகிவிட்டதாக அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

மதுரை விமான நிலையத்தி்ல் நிருபர்களிடம் பேசிய அவர்,

தேர்தல் நேரத்தில் இருந்த எழுச்சியை விட தற்போது தொகுதி மக்களிடம் எழுச்சி அதிகமாக உள்ளது. நன்றி தெரிவிக்க நாங்கள் போனபோது வரவேற்பு மிகச் சிறப்பாக இருந்தது.

எந்த தேர்தலிலும் தோற்றாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறுவது ஜெயலலிதாவின் வழக்கம். அதையே தான் திருமங்கலத்தில் தோற்ற பின்னரும் கூறியிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் தோற்றபோதும் இதையே கூறினார், நாடாளுமன்ற தேர்தலில் தோற்றபோதும் இதையே கூறினார், இடைத் தேர்தல்களில் தோற்றபோதும் இதையே கூறினார், இப்போதும் அதையே கூறுகிறார் என்றார் ஸ்டாலின்.

உடனிருந்த திமுக தென் மண்டலப் பொறுப்பாளர் அழகிரி கூறுகையில், தோற்றவுடன் புலம்ப ஆரம்பிப்பது ஜெயலலிதாவின் வழக்கம் தானே என்றார்.

மக்களவைத் தேர்தலில் அழகிரி போட்டி?:

இதற்கிடையே வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மதுரையில் அழகிரி போட்டியிட வேண்டும் என்று கோரி மதுரை புறநகர் திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அழகிரியின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+