சத்யம்: மிரள வைக்கும் புதுப்புது மோசடிகள்!

இந்த ரூ. 7,800 கோடி மோசடி தவிர, பினாமி கணக்குகள் மூலம் மட்டும் ராஜு வெளிநாட்டுக்குக் கடத்தியுள்ள பணம் ரூ.2,800 கோடிக்கும் அதிகம் என்கிறது முதல்கட்ட புலானாய்வு விசாரணை. மேலும் 3,800 கோடி ரூபாய் டெபாஸிட்டுகளையும் 'காணவில்லை'யாம்!
இந்த மோசடியில் சுமார் ரூ. 1,840 கோடி அளவுக்கு பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் மட்டுமே போலியான நபர்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது எல்லாமே போலிக் கணக்குகள். அனுப்பப்பட்ட பணம் மட்டும் நிஜம். இதுதான் ராஜுவின் டெக்னிக்.
வெளிநாடுகளில் தனது க்ளையண்டுகளாகவும், ஏஜென்ஸிகளாகவும் நூற்றுக்கணக்கான போலி நிறுவனங்களை உருவாக்கி, அவர்களுக்கு சத்யம் நிறுவனத்தின் பணத்தை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார் ராஜூ.
இந்தத் தொகைதான் ரூ.1800 கோடியைத் தாண்டுகிறது. இந்தப் பணம் முழுவதும் பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ராஜு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சொல்கின்றன.
டெபாசிட்டுகள் எங்கே?:
சத்யம் நிறுவனத்தின் பல்வேறு டெபாஸிட்டுகளாக ரூ.3,800 கோடியும், நடப்புக் கணக்கில் ரொக்கமாக ரூ.1,300 கோடியும் இருப்பதாக சத்யம் கணக்குகள் காட்டுகின்றன. ஆனால் இந்த தொகை டெபாஸிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜு குறிப்பிட்டிருக்கும் வங்கிகள், 'டெபாஸிட்டா... அப்படீன்னா...?' என்கிற ரீதியில் திருப்பிக் கேட்கத் தொடங்கியுள்ளன.
உதாரணத்துக்கு ஐசிஐசிஐ வங்கியில் ரூ.1,000 கோடி சத்யம் கணக்கில் இருப்பதாக சத்யம் கணக்கு ஏடுகள் தெரிவிக்கின்றன. இதற்கான வங்கிக் கணக்குப் புத்தகம், வருமான வரி கட்டிய ரசீது எல்லாமே பக்காவாக உள்ளன. ஆனால் ஐசிஐசிஐ வங்கியோ, அப்படி ஒரு கணக்கே சத்யம் நிறுவனத்துக்கு தங்கள் வங்கியில் இல்லை என நேற்று அறிவித்துவிட்டது.
அப்படியெனில் இந்த ஆவணங்கள், அதிலுள்ள வங்கி அதிகாரிகள் கையெழுத்து, வருமான வரி கட்டப்பட்டது... இந்த சந்தேகங்கள் விசாரணை அதிகரிகளை திக்பிரமை கொள்ள வைத்துள்ளன.
இன்னும் இப்படி ஏராளமான மோசடிக் கணக்குகள் அம்பலத்துக்கு வரவிருப்பதாகத் தெரிவிக்கின்றன புலனாய்வு ஏஜென்ஸிகள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications