இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 17 இலங்கை மீனவர்கள் கைது
சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 17 சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டது.
இந்திய கடலோர காவல் காவல்படைக்கு சொந்தமான சாகர் கப்பல், நேற்று இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அதற்கு உதவியாக, இந்திய கடற்படையின் விமானமும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.
அப்போது இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி 3 மர்ம படகுகள் நுழைந்ததை அவை பார்த்து விட்டன. இதையடுத்து உடனடியாக அந்த படகுகளை இந்திய கடலோர காவல் படையினர் முற்றுகையிட்டனர்.
பின்னர் 3 படகுகளையும் பிடித்தனர். 3 படகுகளிலும் 17 மீனவர்கள் இருந்தனர். அவர்கள் சிங்கள மீனவர்கள் என்பது தெரியவந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த மீன்களும் கைப்பற்றப்பட்டது.
அவர்கள் வந்த வத்சோம்', புஷ்ரஜ்னி', சிங்களா' என்ற பெயருடைய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும், கைதான சிங்கள மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படை கப்பலில் ஏற்றி, சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்.
இன்று அவர்கள் காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications