நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டி மக்கள் போராட்டம் !
பழனி: பழனியில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி பொது மக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்ககளில் பழனியும் ஒன்று. இங்குள்ள முருகன் கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்களும் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடும்.
இங்கு வரும் மக்கள் தாங்களது குப்பைகளை அப்படியே வீசியேறிந்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நகரகத்தின் பல பகுதிகளில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்று அனைத்து கட்சியினரும், பொது நல அமைப்பைச் சேர்ந்த பலரும் நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் தங்கள் எதிர்பப்பை தெரிவிக்கும் வகையில் தெருவில் உள்ள குப்பைகளை வண்டி ஒன்றில் அள்ளி வந்து நகராட்சி அலுவலகம் முன்பு கொட்டி திடீர் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த பழனி நகராட்சி கமிஷனர், நகராட்சி அலுவகம் வந்து நாற்றம் வீசும் குப்பைகளை பார்வையிட்டார். பின்பு நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகராட்சி அலுவலம் முன்பு குப்பைகளை கொட்டியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications