அரசியல் கட்சிகளின் பந்த்களுக்கு தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: அரசியல் கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து பிப்ரவரி 4ம் தேதி தமிழகத்தில் பந்த் நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதை தடை செய்யக் கோரி தமிழகத்தை சேர்ந்த வக்கீல் சரவண சதீஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார்.
ஆனால் இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. விசாரணை பிப்ரவரி 16ம் தேதி்க்கு தள்ளி வைக்கப்பட்டது.
நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை அளித்தது.
அதில், சில அரசியல் கட்சிகள் அடங்கிய ஒரு அமைப்பு அறிவித்து இருந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்கும்படி மனுதாரர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அரசியல் கட்சிகள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தங்களை மேற்கொள்ளலாம். எந்த சட்டத்திலும் இதற்கு தடை விதிக்கப்படவில்லை. எனவே பொது வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications