பாதுகாப்பு வளையத்தில் 'க்ளஸ்டர் பாம்' தாக்குதல்-53 தமிழர்கள் பலி
புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன் மக்கள் பாதுகாப்பு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நேற்று காலை வரை இலங்கைப் படையினர் இடைவிடாமல் கொத்து குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலய பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து இலங்கைப் படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் சிறார்கள் ஆவர்.
தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை இலங்கைப் படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில், 32 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 89 பேர் காயமடைந்தனர்.
தேவிபுரம் பகுதியில் மக்களுக்கான உணவு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மீது இலங்கைப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இதில் மூன்று பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் இல்லாததால், கடந்த இரண்டு நாட்களில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications