குஜராத்-பாஜகவே முன்னிலை..ஆனால் காங். நெருகுகிறது

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் என்று வந்தால் நரேந்திர மோடியை பெருமளவில் ஆதரித்து பாஜகவை ஆட்சியில் அமர வைத்து வரும் மக்கள் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு முழு அளவில் வாக்களிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் மோடி வென்ற நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலிலேயே அது எதிரொலித்தது. மொத்தமுள்ள 26 இடங்களில் 14ல் பாஜக வென்றது. கிட்டத்தட்ட அதற்கு சரிசமமாக 12 இடங்களில் காங்கிரஸ் வென்றது.
ஆனால், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற்றார். ஆனாலும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இணையான இடங்களை மீண்டும் காங்கிரஸ் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 47 சதவீதம் பேர் பாஜகவுக்கு என்றும், 45 சதவீதம் பேர் காங்கிரசுக்கு என்றும் பதிலளித்துள்ளனர். இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 2 சதவீத இழப்பாகும். அதே நேத்தில் காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு ஆதகவு 1 சதவீதம் சரிந்து 2 சதவீத மக்கள் ஆதரவே இப்போது உள்ளது.
பிற்பட்டோர்-தலித்கள் ஆதரவு-பாஜக இழப்பு:
பாஜகவுக்கு படேல்கள், படிதர் ஆகிய சமூக மக்களிடையே 10 சதவீத ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் பிற்படுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளிடையே பாஜகவின் செல்வாக்கு 12 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
அதே போல தலித்களிலும் 7 சதவீதம் பேரின் ஆதரவை பாஜக இழந்துள்ளது. அதே போல பழங்குடி இனத்தினர் இடையே பாஜகவி்ன் செல்வாக்கு 12 சதவீதம் சரிந்துள்ளது.
அதே நேரத்தில் ஒட்டுமொத்தத்தில் 72 சதவீதம் பேர் மோடியின் ஆட்சி திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இம்முறை கேசுபாய் படேல் போன்ற அதிருப்தியாளர்கள் இல்லாத நிலையில் பாஜக தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மோடியை எதிர்கொள்ளும் அளவுக்கு காங்கிரசில் பிரச்சார பீரங்கிகள் இல்லாதது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இப்போதுள்ள நிலையில் பாஜகவே முன்னிலையில் உள்ளது. வெறும் 2 சதவீத வேறுபாடுட்டுடன் இரண்டாவது நிலையில் உள்ள காங்கிரஸ் தனது வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரித்தால் தவிர பாஜகவே அதிக இடங்களில் வெல்லலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications