பள்ளி சுவற்றில் மினி பஸ் மோதி 5 பேர் பலி!
கும்பகோணம்: கும்பகோணம் அருகே பள்ளி சுவற்றில் மோதி மினி பஸ் கவிழ்ந்ததில் மூன்று மாணவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்பகோணத்தில் இருந்து சன்னாபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஒன்று, சாலைக்கு அருகே இருந்த மேல்நிலைப் பள்ளியின் சுவற்றில் மோதியது. அதில் மினி பஸ் கவிழ்ந்தது.
இதில் சன்னாபுரத்தைச் சேர்ந்த ஐடிஐ மாணவர் விஜயபாலன்(17), 8ம் வகுப்பு மாணவன் யோகராஜ் (13), 10ம் வகுப்பு மாணவன் பெரோஸ் கான் (15), டிங்கர் தொழிலாளி ராஜ்குமார் (24) உட்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மேலும், படுகாயமடைந்த மூன்று பேர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், லேசான காயமடைந்த 51 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் போலீசார் விபத்து நடத்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications