ஆழியாறு: கேரளாவுக்கு தமிழகம் கூடுதல் தண்ணீர்
சென்னை: பரம்பிகுளம்-ஆழியாறு அணையிலிருந்து வரும் 15ம் தேதி கேரளாவுக்கு 0.2 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
பரம்பிகுளம்-ஆழியாறு அணை திட்டத்தின்படி தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் கேரளாவுக்கு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 7.25 டிஎம்சி தண்ணீர் விவசாயத்துக்காக வழங்கிவருகிறது.
தற்போது இந்த திட்டத்தால் பயன்பெறும் கேரள பகுதிகளில் விவசாயிகள் வேலையை ஆரம்பித்துள்ளனர். இந்தாண்டு கேரளாவில் பருவமழை தவறியதால் கூடுதல் தண்ணீர் தரும்படியும், வறட்சியால் பயிர்கள் வாடுவதாகவும் கூறி வருகிறது.
இதுதொடர்பாக, இரு மாநில அமைச்சர்களும் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து கேரளா பாசனத் துறை செயலாளர் குணவர்தன், தலைமை பொறியாளர் லதிகா உட்பட சில அதிகாரிகள் நேற்று காலை சென்னை வந்து தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் முடிவில் கேரளத்துக்கு கூடுதலாக 0.2 டி.எம்.சி. தண்ணீரை அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் வழங்க தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து, பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில்,
கேரளாவுக்கு 0.2 டிஎம்சி தண்ணீர் வழங்க தமிழ அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டது. ஆனால், இதை சற்று முன்னதாக வழங்கும் படி வலியுறுத்தியது. இதையடுத்து வரும் 15ம் தேதி பரம்பிகுளம் - ஆழியாறு அணையிலிருந்து தண்ணீரை தமிழகம் வழங்கும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications