கோவையில் கடும் மூடுபனி-விமான சேவை பாதிப்பு
கோவை: கோவையில் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக அங்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அனைத்து விமானங்களும் தாமதமாக வந்தன.
கடந்த சில நாட்களாக கோவை மாநகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேசமயத்தில் இரவில் கடும் குளிர் மக்களை வாட்டி வருகிறது. இதனால் மக்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
காலை 8 மணி வரை வெளிச்சம் தெரிவதில்லை. எதிரே என்ன வருகிறது என்பதை அறியமுடியாத நிலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை போட்டப்படி வண்டி ஓட்டி வருவதை சகஜமாக காண முடிகிறது.
பாதைகள் தெளிவாக தெரியாதநிலையில் மிகவும் மெதுவாக செல்வதால் சரக்கு வாகனங்கள் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. இதனால் சில தொழிற்சாலை வேலைகளும் தாமதமாகி வருகின்றன.
மூடுபனியின் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவை வர வேண்டிய அனைத்து விமானங்களும் தாமதமாக வந்தன.
காலை 6.55க்கு வந்து சேர வேண்டிய கிங்பிஷர் விமானம் சுமார் 1 மணி நேரம் தாமதாக 8 மணிக்கு வந்தது. 7.40க்கு வரவேண்டிய பாரமவுண்ட் விமானம் 20 நிமிடம் தாமதமாகவும், 8 மணிக்கு வரவேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் 9 மணிக்கும் கோவை வந்தன.
இந்த விமானங்களின் மூலம் சென்னை செல்ல காத்திருந்தவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி வழக்கு.. குற்றவாளிகள் மீது பாய்ந்த ஆக்ஷன்! பரபரப்பான கோவை! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications