மே 15 வரை மின்வெட்டு: ஆற்காடு வீராசாமி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கோடைகாலத்தில் மின்வெட்டு இருக்கும். மே மாதம் 15ம் தேதிக்குப் பிறகு, காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கும். அதன்பின், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டில் இருந்து விலக்கு தரப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
மே மாதம் 15ம் தேதி வரை... தமிழகத்தில் ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை நிலவுகிறது. மே மாதம் 15ம் தேதிக்குப் பிறகு, காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கும். அதன்பின், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டில் இருந்து விலக்கு தரப்படும்.
மின் தட்டுப்பாடு காரணமாக, கோடை காலத்திலும் மின் வெட்டு இருக்கும். தற்போது, வெளி மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 7 முதல் 8 வரை விலைக்கு வாங்கப்படுகிறது. கோடை காலத்தில் மின்சாரத்துக்கு கிராக்கி ஏற்படுவதால், வட மாநிலங்கள் அதை அதிக விலைக்கு விற்கின்றன.
ஒரு யூனிட்டுக்கு ரூ. 9 வரை கேட்கிறார்கள். ஆனாலும், கோடையில் மின் வெட்டு இல்லாமல் செய்ய 500 மெகா வாட் மின்சாரத்தை வட மாநிலங்களில் இருந்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கம்பிகளில் மின்சாரம் கொண்டு செல்லப்படுவதன் மூலம், 18 சதவீதம் மின் இழப்பு ஏற்படுகிறது. இதைக் குறைக்க மத்திய அரசு மூலம் தனியான திட்டத்தை செயல்படுத்த மின்சார வாரியம் கடிதம் எழுதியது. அதன்படி, 650 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க உள்ளது. இம்மாதம் அல்லது ஏப்ரலில் இந்த நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
விவசாயம் மற்றும் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தை தனித் தனி கம்பிகளில் கொடுப்பதன் மூலம், மின் இழப்பை 18 லிருந்து 15 சதவீதமாகக் குறைக்க முடியும். திருநெல்வேலி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் இந்தப் பணி தொடங்கும் என்றார் ஆர்க்காடு.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications