டோணிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர் கைது
புவனேஸ்வர்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல் கடிதம் அனுப்பியவரை நேற்று ஒரிசா போலீசார் கைது செய்தனர்.
இந்திய கேப்டன் டோணிக்கு கடந்த மாதம் டிசம்பரில் அடுத்தடுத்து இரண்டு மிரட்டல் கடிதம் வந்தன. அதில் ரூ. 50 லட்சம் கொடுக்குமாறும் இல்லையென்றால் அவரது வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவோம் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து டோணியின் தந்தை பான் சிங், ராஞ்சியிலுள்ள ஜெகநாத்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் எப்ஐஆர் பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முகமது தஸ்லீம் என்ற குற்றவாளியை ஒரிசா போலீசார் நேற்று புவனேஸ்வரில் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ராஞ்சி போலீஸ் சூப்பிரடன்ட் ரிச்சர்ட் லக்ரா கூறுகையில், ராஞ்சி போலீசார் விரைவில் புவனேஸ்வர் செல்கின்றனர். ஒரிசா போலீசார் அவர்களிடம் முகமது தஸ்லீமை ஒப்படைப்பார்கள் என்றார்.
இது குறித்து முகமது தஸ்லீமின் அண்ணன் கூறுகையில், நேற்று மாலை 4.30 மணி அளவில் போலீசார் அவனை கைது செய்தனர். அவன் மீது டெல்லியில் ஒரு கொலை வழக்கு இருப்பதாகவும், புவனேஸ்வரத்தில் ஒரு கடத்தல் வழக்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அவன் தற்போது எந்த வழக்கில் கைது செய்யப்படுகிறான் என்பது தெரியாது. எனது பாதுகாப்பிற்காக எனக்கு தெரிந்த உண்மைகளை போலீசிடம் நானாக வலிய சென்று தெரிவித்துள்ளேன். அவன் போலீ்ஸ் பிடியில் இருந்தால் தான் எனக்கு நிம்மதி என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications