ஜெ. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கம்யூ. கட்சிகள் ஆதரவு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரின் உண்ணாவிரத அறிவிப்புக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் கூறுகையில்,
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 10-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த உண்ணாவிரதத்துக்கு முழு ஆதரவு கொடுப்போம் என்றார்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, போரை நிறுத்த கோரி வற்புறுத்திட மார்ச் 10-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்திட அழைப்பு விட்டதோடு, தானும் உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருப்பது, கொடுமைக்கு ஆளாகி உயிருக்காக போராடி வரும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆறுதலையும் அளிக்கிறது.
மேலும், இந்திய தமிழர்களுக்கு ஊக்கத்தையும், மகிழ்ச்சியை தருவதாக இருப்பதால் இப்போராட்ட அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்டு கட்சி முழு மனதோடு வரவேற்பதோடு, இப்போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தரும் என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications