வேலூர், ராமநாதபுரத்தில் இந்திய தேசிய லீக் போட்டி
மதுரை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வேலூர் - ராமநாதபுரம் தொகுதிகளை கேட்டு போட்டியிடுவோம் என்று இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எம். பஷீர் அஹமது தெரிவித்துள்ளார்.
மதுரையில் தேசிய லீக் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்திற்கு பின்பு, மாநிலத் தலைவர் எம். பஷீர் அஹமது செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பேன் என்று கூறிய காங்கிரஸ் கட்சி ஏமாற்றி விட்டது.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசு அமைத்த உருது முஸ்லிம் ஆணையம் முறையாக செயல்படவில்லை. அதே போன்று மூன்று ஆண்டுகளாகியும் உலமாக்கள் நலவாரியம் செயல்படவில்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய லீக்கிற்கு வாணியம்பாடி, பாளையங்கோட்டை அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டது.
அது போல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் அல்லது ராமநாதபுரம் தொகுதியை அதிமுக கூட்டணியில் கேட்டு அங்கு போட்டியிடுவோம் என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications