சென்னை நகரில் ஜூன் மாதம் 3ஜி செல்போன் சேவை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

3G iphone
சென்னை: சென்னை மாநகரில் ஜூன் மாதத்திற்குள் 3ஜி சேவையை தொடங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தலைமைப் பொது மேலாளர் வேலுச்சாமி கூறுகையில், 3ஜி சேவைக்காக 600 பேஸ் டிரான்ஸ்மிட்டிங் நிலையங்களை (பி.டி.எஸ்) நிர்மானித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை 25 பிடிஎஸ் அமைக்கப்பட்டு உள்ளது.

3ஜி சேவை மூலம் பல வசதிகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். அதி வேக இன்டர்நெட் இணைப்பு இதன் மூலம் சாத்தியமாகிறது. மேலும், மறு முனையில் பேசுவோரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு பேச முடியும்.

பி.எஸ்.என்.எல்லின் இந்த சேவை முதலில் சென்னையில் தொடங்கப்படுகிறது. பின்னர் நாட்டின் பிற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

தற்போது சென்னை நகரில் உள்ள பி.எஸ்.என்.எல்லின் பிற சேவைகளுக்காக கூடுதலாக 400 பிடிஎஸ்களை அமைத்து வருகிறோம்.

3ஜி சேவைக்கான மொத்த திட்டச் செலவு 2.5 பில்லியன் ரூபாய்களாகும்.

சென்னை நகரில் புதிதாக 5000 லேன்ட்லைன் இணைப்புகள் கேட்டு விண்ணப்பம் வந்துள்ளது. பெருமளவில் பிஎஸ்என்எல் லேன்ட் லைன் இணைப்புகள் சரண்டர் ஆகி வரும் நிலையில் இது ஊக்கம் தருவதாக உள்ளது.

மாதந்தோறும் புதிதாக 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர். அதேசமயம் 25 ஆயிரம் பேர் சரண்டர் செய்து வருகின்றனர். இருப்பினும் நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், சென்னையில், புதிய வாடிக்கையாளர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளனர்.

சென்னை நகரில் பத்து லட்சம் லேன்ட்லைன் மற்றும் செல்போன் இணைப்புகள் உள்ளன. 2 லட்சத்து 80 ஆயிரம் பிரான்ட்பேன்ட் இணைப்புகள் உள்ளன.

சிக்னல் பிரச்சினை வாடிக்கையாளர்களின் பொதுவான புகாராக உள்ளது. இதற்குக் காரணம், எங்களது பிடிஎஸ்களை விட உயர்ந்த கட்டங்கள்தான் காரணம். இதை சமாளிக்க சிக்னல்கள் பெறுவதில் அதி நவீன வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

சென்னை அருகே லார்சன் அன்ட் டூப்ரோ அருண் எக்ஸல்லோ நிறுவநம் நிர்மானித்து வரும் எஸ்டானிகா என்ற டவுன்ஷிப்பில் குடியேறவுள்ளோருக்கான அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளையும் பூர்த்தி செய்வதற்காக அந்த நிறுவனத்துடன் ரூ. 2,500 கோடி மதி்ப்பீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, கிட்டத்தட்ட 100 ஒப்பந்தங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் அங்கு குடியேறுவோருக்குத் தேவையான அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளையும் பி.எஸ்.என்.எல் செய்து தரும்.

எஸ்டானிகா நகரில், பி.எஸ்.என்.எல்லுக்காக 2500 சதுர அடிப் பரப்பளவில் ஒரு கட்டடத்தை எல் அன்ட் டி கட்டித் தருகிறது. இங்கு டெலிபோன் இணைப்பகம் செயல்படும். இதற்கு வருடாந்திர வாடகையாக ரூ. 1 மட்டுமே வசூலிக்கவுள்ளனர். அந்தக் குடியிருப்பில் மொத்தம் 1900 அபார்ட்மென்ட்கள் உள்ளன. குடியிருப்புகள் தவிர ஹோட்டல், ஐடி பூங்கா, வர்த்தக வளாகம் உள்ளிட்டவையும் அடங்கியுள்ளன.

நாங்கள் அங்கு போடவுள்ள முதல் ரூ. 6 கோடியாகும். அதை ஒரே வருடத்தில் நாங்கள் எடுத்து விடுவோம் என்றார் வேலுச்சாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+