அதிமுகவில் மரியாதை இல்லை - திமுகவில் இணைகிறேன்: ராதாரவி

நேற்று மாலை முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு வந்த ராதாரவி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் வெளியில் வந்த அவர் இதை திமுகவில் சேருவதற்கான முன்னோட்டமாக எடுத்துக் கொள்ளலாமா என்று நிருபர்கள் கேட்டபோது, எடுத்துக் கொள்ளலாம். விரைவில் திமுகவில் சேருவேன் என்றார் ராதாரவி.
தொடர்ந்து அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த போது பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது வந்து நலம் விசாரித்தேன். என்னுடைய தாயார் மறைந்த போது, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட என்னை போனில் தொடர்பு கொண்டு தூக்கம் விசாரித்த மனிதாபிமானம் மிக்கவர் அவர். அந்த அடிப்படையில் அவரை இன்று சந்தித்தேன்.
கடந்த பல மாதங்களாக அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. மேடைகளில் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.
இது மட்டுமல்லாமல் என்னுடைய தாயார் இறந்த போது சிறு இரங்கல் கூட ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. எனது நெருங்கிய நண்பர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூட எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத படி செய்து விட்டார்கள். இது போன்ற பல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற முடிவு செய்து இருக்கிறேன்.
அதிமுகவில் தொண்டர்கள் மரியாதை கொடுத்தார்கள். தலைமை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் தலைமைக்கு எடுத்து சொல்ல ஆள் இல்லை.
அ.தி.மு.க.வில் தகுதியானவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் இன்னும் நிறைய பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவார்கள் என்றார் ராதாரவி.
எப்போது திமுகவில் இணைவீர்கள் என்ற கேள்விக்கு விரைவில் என்ற ராதாரவி, தி.மு.க.வில் சேரும் போதே பதவியை எதிர்பார்த்து சேரவில்லை. இங்கேயும் அப்படி தான் என்றார். கண்டிப்பாக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.
திமுகவில் நீண்ட காலமாக இருந்தவர் ராதாரவி. இருப்பினும் எம்.எல்.ஏ உள்பட எந்த வாய்ப்பும் அவருக்குக் கிட்டவில்லை. இந்த நிலையில் அவரும், எஸ்.எஸ்.சந்திரனும் திமுகவிலிருந்ரு அதிமுகவில் இணைந்த பின்னர் ராதாரவி சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அதேபோல எஸ்.எஸ்.சந்திரன் ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்டார்.
தற்போது இருவரும் அதிமுகவில் முன்பு போல ஆக்கப்பூர்வமாக இருப்பதாக தெரியவில்லை. எனவே ராதாரவியைப் பின்பற்றி சந்திரனும் வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications