கோயில் முகவரி கொடுத்த போலி வாக்காளர்கள்!
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய வக்காளர்களுக்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டதில் ஒரு குடும்பத்தினர் பிள்ளையார் கோவில் முகவரியைக் கொடுத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 16ம் தேதி துவக்குவதை அடுத்து புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து அதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அதிகாரிகள் வினியோகித்து, பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தேர்தல் அதிகாரிக்கு 1, சுப்பாராவ் தெரு, எழும்பூர் என்று முகவரியில் இருந்து தங்களையும் வாக்காளர் பட்டியலில் இணைக்குமாறு விண்ணப்பம் தரப்பட்டது. அந்த மனுவில் தவுலத்பேகம், அஸ்லாம மற்றும் நூர் முகமுது என பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து அந்த விலாசத்துக்கு சென்ற தேர்தல் அதிகாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அது வீடு அல்ல, பிள்ளையார் கோவில்.
இதையடுத்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications