கடன் தொல்லையால் 1.83 லட்சம் விவசாயிகள் தற்கொலை- நம்மாழ்வார்
மதுரை: கடன் தொல்லை தாங்காமல் நாட்டில் 1.83 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்து கொண்டு கூறுகையில்,
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் முறையான உணவுக் கொள்கை வகுக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கடன் தொல்லை தாங்க முடியாமலும், அநியாய வட்டி கொடுத்து மீள முடியாமலும், நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்...
இது வேதனை தரும் செய்தியாகும். விவசாயிகள் தற்கொலை நாட்டிற்கு மிக பெருத்த அவமானம் ஆகும். இயற்கை விவசாயத்தை மறந்து, இரசாயன விவசாயத்திற்கு மாறி, பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதால் பயிர்களை விஷத்தன்மை தாக்குகிறது.
இதனால் உணவுக்கு செலவழிப்பதை விட அதிகமாக மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டியுள்ளது. ரசாயன உரங்களை போட்டு விவசாயம் செய்வதால் நமது நிலத்தில் பாதி பயனற்றதாகி விட்டது.
இதனால் சிறுநீரக பாதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. எனவே நமது விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு முழுமையாக மாற வேண்டும் என்றார் நம்மாழ்வார்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications