நெல்லையில் 21 வாக்கு சாவடிகள் இடம் மாற்றம்?
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பழுதடைந்த 21 வாக்கு சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருப்பதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. கலெக்டர் பழனியாண்டி தலைமை வகித்தார். டிஐஜி கண்ணப்பன், போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் பழனியாண்டி பேசுகையில்,
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 21 வாக்கு சாவடிகளின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. இந்த வாக்கு சாவடிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டு அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளின்படி கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதுடன், பொதுவான நன்னடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்.
தனியார் இடங்கள், பொது இடங்கள், அரசு கட்டிடங்கள், அரங்கங்கள், மற்றும் பிரசாரம் சம்பந்தப்பட்ட இடங்களிலும், தொலைக்காட்சி, தொலைக்காட்சி தொடர், வானொலி மூலம் பிரச்சாரம் செய்யும் போதும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
தேர்தல் அமைதியான முறையிலும், நேர்மையான முறையிலும் நடக்க அனைவரும் முழு ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் கலெக்டர் பழனியாண்டி.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications