நாள் குறியுங்கள்: கருணாநிதிக்கு நெடுமாறன் சவால்
சென்னை: இலங்கைக்குப் போய் போரைத் தடுத்து நிறுத்த வேண்டியதுதானே என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதை ஏற்று நாங்கள் செல்லத் தயார். அவர் நாள் குறித்துத் தரட்டும் நாங்கள் போகிறோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! அந்த நாட்டின் அரச தலைவர் ராஜபக்சவை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்? நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும்.
கோழைகளாகிய நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பார்த்து களிக்கிறோம் கைதட்டி ஜெயகோஷம் போடுகிறோம்" என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இப்போது இவ்வாறு கூறுபவர் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
யாழ். மக்களுக்கு உணவு அனுப்பாமல் சிங்கள அரசு பட்டினி போட்ட போது அந்த மக்களுக்கு உதவ 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் நாகப்பட்டினம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து படகுகள் மூலம் உணவு - மருந்துப் பொருட்களை ஏற்றிச் செல்ல நாங்கள் முயன்ற போது எங்களுக்கு படகுகள் தரக்கூடாதென மீனவர்களை மிரட்டி, எங்களைப் போக விடாமல் தடுத்து கைது செய்தவர் இதே முதலமைச்சர் கருணாநிதி என்பதை அவருக்கு நினைவுப் படுத்துகிறேன்.
இவ்வளவுக்கும் நாங்கள் போர்ப் படைத் திரட்டிச் செல்லவில்லை. மனித நேயத்துடன் எங்கள் சகோதரத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லத்தான் முயன்றோம்.
அதையே தடுத்தவர், இப்போது படகுகளில் ஏறி நாங்கள் செல்வதற்கு குறுக்கே நிற்கப் போவதில்லை என அவர் கூறுவது உண்மையாக இருந்தால் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம்.
முதலமைச்சர் அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications