நாளை முதல் திமுக நேர்காணல்-3ம் தேதி வேட்பாளர் பட்டியல்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் நேர்காணல் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு நடக்கும் என கூறப்பட்டிருந்தது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி மற்றும் திமுக பொது செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் இந்த நேர்காணல் நடக்க இருக்கிறது.
இந்நிலையி்ல் அன்பழகன் கூறுகையில்,
நேர்காணலை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இரண்டு நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம் இதையடுத்து நாளை துவங்கி வரும் 6ம் தேதி வரை நடக்கும் என கூறப்பட்ட நேர்காணல் 3ம் தேதியுடன் முடிகிறது என்றார்.
இதையடுத்து நாளை 10 தொகுதிகளுக்கும், 3ம் தேதி 11 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தப்படும் என தெரிகிறது.
மாற்றப்பட்ட திமுக வேட்பாளர்களின் நேர்காணல் விபரம்:
நாளை காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, ஸ்ரீபெரும்பூதூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும், மாலையில் மத்திய சென்னை, கரூர், பெரம்பலூர், அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய 5 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது.
நாளை மறுநாள் காலையில் நீலகிரி (தனி), பொள்ளாச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும், மாலையில் மீதமுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, வடசென்னை, தென்சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய 6 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது.
நேர்காணலுக்கு பின் வெள்ளிக்கிழமையே திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications