காங்கிரஸ் எம்.பிக்கள் 10 பேருக்கு மீண்டும் சீட்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய டெல்லியில் இன்று கூட்டம் நடைபெறுகிறது.
இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் யார் வேட்பாளர்கள் என்பதை அறிய பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதுச்சேரியைப் பொறுத்தவரை நாராயணசாமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. தற்போது அவர் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.
தமிழகத்தில் தற்போது எம்.பிக்களாக உள்ள பத்து பேருக்கும் மீண்டும் சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது. காரணம், இவர்களில் யாரை தூக்கினாலும் அவர் சார்ந்த கோஷ்டி பிரச்சினையைக் கிளப்பும் என்பதால்.
சிவகங்கையில் ப.சிதம்பரம், மயிலாடுதுறையில் மணிசங்கர அய்யர், திருப்பூரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார்கள்.
சேலத்தில் தங்கபாலு மீண்டும் நிற்பார். காஞ்சிபுரம் தனி தொகுதியில் ராணி, ஈரோட்டில் கார்வேந்தன், விருதுநகரில் என்.எஸ்.வி.சித்தன், கோவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பிரபு, தேனியில் ஜே.எம்.ஹாரூண் ஆகியோர் போட்டியிடலாம்.
மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் புதுமுகங்கள் நிறுத்தப்படக் கூடும்.
தனுஷ்கோடி ஆதித்தனின் மகள் அனுஷாவுக்கு நெல்லை சீட் தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கும் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல தென்காசியில் விஸ்வநாதன் நிறுத்தப்படலாம். கடலூரில் பி.ஆர்.எஸ். வெங்கடேஷுக்கு சீட் கிடைக்கும் என்கிறார்கள். திருச்சியில் ஜெரோமுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இன்று கூடும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழுக் கூட்டத்தில், வேட்பாளர்களை தேர்வு செய்து சோனியா காந்தியிடம் ஒப்படைக்கவுள்ளனர். அவர் 11ம் தேதி வேட்பாளர்களை அறிவிப்பார் எனத் தெரிகிறது.
தமிழகத்தில், 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. எனவே அதற்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி விடும் என்பது மட்டும் நிச்சயம்!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications