அப்படி பேச மாட்டேன்-கோர்ட்டில் உறுதியளித்த வருண்
எடா (உ.பி): உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இனிமேல் துவேஷத்தைத் தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று உ.பி. கோர்ட்டில் வருண் காந்தி உறுதிமொழி அளித்துள்ளார்.
பிலிபித் தொகுதியில் பேசிய பேச்சுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் வருண் காந்தி.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரியும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ததை செல்லாது என அறிவிக்கக் கோரியும் அவர் சுப்ரீம் கோர்ட்டி்ல மனு செய்துள்ளார்.
அவரது ஜாமீன் கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதி்மன்றம், இனிமேல் இதுபோல துவேஷமாக பேச மாட்டேன் என வருண் காந்தி உத்தரவாதம் அளித்தால் ஜாமீன் தருவது குறித்து பரிசீலிக்க முடியும் என அறிவுறுத்தியது.
இதற்கு வருண் காந்தி ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து வருண் காந்தியின் உத்தரவாதம் அடங்கிய மனு, எடா மாவட்ட நீதிபதி கெளரவ் தயாளிடம் அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கவுள்ளார். வருகிற 16ம் தேதி வருணின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது அவர் அளித்துள்ள உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கும் எனத் தெரிகிறது.
வருண் காந்தி தனது உத்தரவாதப் பத்திரத்தில், இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக இனி எதையும் பேச மாட்டேன். நடத்தை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என உறுதியளித்துள்ளதாக அவரது வக்கீல் பிரசாந்த் சிங் அடல் கூறியுள்ளார்.
இன்று வருண் காந்தியை அவரது சித்தி அம்பிகா சுக்லா எடா சிறைக்குச் சென்று பார்த்தார்.
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications