செல்போன்களைப் பயன்படுத்துவோரில் சென்னை முதலிடம்

Subscribe to Oneindia Tamil

Senthil
சென்னை: நாட்டிலேயே அதிக அளவில் செல்போன்களைப் பயன்படுத்துவதில் சென்னை மாநகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட தனியார் நிறுவன கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது.

சென்னையில், பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களைப் பயன்படுத்துகின்றனராம்.

மொத்தம் 111 சதவீதம் பேர் சென்னையில் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.

2வது இடத்தை மும்பை பிடித்துள்ளது. இங்கு 90 சதவீதம் பேர் செல்போன்களைப் பயன்படுத்துகின்றனர். டெல்லிக்கு 3வது இடமும், கொல்கத்தாவுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளது.

ஆய்வு நிறுவனம் இதுகுறித்துக் கூறுகையில், சென்னை மக்கள் மிகவும் நன்றாக உழைக்க கூடியவர்கள். ஒரு நாளில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபடுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.

சென்னையில் செல்போன் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால் ஆயுட்கால சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இதனால் வரும் அழைப்புகளை மட்டும் பயன் படுத்துவதற்காக பலர் கூடுதல் செல்போன்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+