தங்கம் விலை பவுனுக்கு ரூ. 272 சரிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலையில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலையில் ரூ.272 சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக பங்குச் சந்தையின் ஏற்ற நிலை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் குறைந்துவிட்டதாலும், ஐஎம்எப் தங்க இருப்பைக் குறைத்துக் கொண்டதாலும் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்துவந்தது.

இடையில் ஓரிருநாள் மீண்டும் தங்கம் விலையில் லேசான உயர்வு தெரிந்தது.

ஆனால் இன்று மீண்டும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.272 குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.10,800க்கு விற்கப்பட்டது. இது நேற்று ரூ.10,736 ஆகவும், ரூ.10,784 ஆகவும் இருந்தது.

இப்போதைய நிலவரப்படி 1 பவுன் தங்கம் ரூ.10512க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் விலை ரூ.1314 மட்டுமே. பார் வெள்ளி ரூ.21,185 ஆகவும், 1 கிராம் ரூ.22.65 என்ற விலைக்கும் விற்கப்படுகிறது.

அட்சய திருதியைக்கு அதிக விற்பனை

அட்சய திருதியை நெருங்கும் வேளையில் தங்கம் விலை குறைந்து வருவது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்பு நகைக்கடைப் பக்கம் போகவே யோசித்தவர்கள் இப்போது பெருமளவில் செல்லத் துவங்கிவிட்டதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.

அட்சய திருதியைக்கு இந்த ஆண்டு அதிக தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+